தமிழ் திரையுலகில் முன்னணி இசையமைப்பாளரான ஏ.ஆர்.ரகுமான் நேற்றைய தினம் தனது 56-வது பிறந்த நாளை கொண்டாடினார்.

இந்நிலையில், ஏ.ஆர்.ரகுமான் தனது பிறந்தநாளில் 'கற்றார் (KATRAAR)' புதிய டிஜிட்டல் பிளாட்பார்ம் தளத்தை அறிமுகப்படுத்தியுள்ளார்.

இது ஒரு டிஜிட்டல் மியூசிக் மற்றும் பிற கலைகளின் பிளாட்பார்ம் ஆகும், இது கலைஞர்கள் தங்கள் படைப்புகளை பட்டியலிடவும் பணமாக்கவும் அதாவது இசை, கலைகள் போன்றவற்றை நேரடியாக அவர்களின் பயனர்களுக்கு வழங்குகிறது.

ஏ.ஆர்.ரஹ்மான் தனது பிரத்யேக படைப்புகளில் சிலவற்றை 'கற்றார்' தளம் மூலம் வெளியிடவுள்ளார்.

பல சர்வதேச தரத்திலான படைப்புகள் விரைவில் இந்த மேடையில் வரவுள்ளது குறிப்பிடத்தக்கது.