அண்மைய நாட்களில் நாட்டைப் பாதித்த சூறாவளி காரணமாக நுவரெலியா, வெலிமடை, கெப்பெட்டிபொல போன்ற பிரதேசங்களில் மரக்கறிச் செய்கை பாரியளவில் பாதிக்கப்பட்டுள்ளது.

 இதனால் பொருளாதார நிலையங்களுக்கு நாளாந்தம் கிடைக்கும் மரக்கறிகளின் அளவு வெகுவாகக் குறைந்துள்ளது.

இதனால் காய்கறிகளின் விலை இன்று மீண்டும் உயர்ந்துள்ளதாக வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.

கெப்பெட்டிபொல பொருளாதார மத்திய நிலையத்திற்கு நேற்று  ஐம்பதாயிரம் கிலோகிராமிற்கும் குறைவான மரக்கறிகளே கிடைத்துள்ளன.

பொதுவாக டிசம்பர், ஜனவரி மாதங்களில் காய்கறிகள் விளைச்சல் குறைவாக இருக்கும், ஆனால் புயலால் காய்கறி பயிர்கள் சேதம் அடைந்து மேலும் உற்பத்தி குறைந்துள்ளது.

 எனினும் எதிர்வரும் பெப்ரவரி மாதத்தில் மீண்டும் வெற்றிகரமான காய்கறி அறுவடை கிடைக்கும் என விவசாயிகள் கூறுகின்றனர்.

நேற்று ஒரு கிலோகிராம் காய்கறிகளின் மொத்த விலை பின்வருமாறு இருந்தது. 

பீன்ஸ் ரூ.550-600,

 பீட்ரூட் ரூ.280-300,

 கத்தரிக்காய் ரூ.280-300,

 கறிமிளகாய் ரூ.550-650,

 பச்சை மிளகாய் ரூ.220-250,

 நோக்கோல் ரூ.240-250,

 வெண்டைக்காய் ரூ.270-290

 மற்றும்பயற்றங்காய் ரூ.300.