இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு மின்சாரக் கட்டண அதிகரிப்புக்கு எதிராக இருப்பதால், இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு சட்ட நடவடிக்கையை மேற்கொள்ள முடியும் என பொது நிறுவனங்களுக்கான குழுவின் முன்னாள் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான சரித ஹேரத் தெரிவித்துள்ளார்.

இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் கருத்துக்களை புறக்கணிப்பது சட்டத்தை மீறுவதாகும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

மின்சாரக் கட்டணத்தை திருத்துவதற்கான பொறிமுறையொன்று நடைமுறையில் உள்ளதால், சட்டத்திற்கு உட்பட்டு நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் எனவும் அவர் தெரிவித்தார்.

கடந்தாண்டு ஒகஸ்ட் மாதம் அமுல்படுத்தப்பட்ட கட்டண உயர்வால் பொதுமக்கள் ஏற்கனவே பாதிக்கப்பட்டுள்ளதாகவும், இது தனியார்மயத்தை நோக்கி செல்லும் தந்திரம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மின்சாரக் கட்டண உயர்வை அங்கீகரிப்பதற்காக அமைச்சரவையில் முன்வைக்கப்பட்ட யோசனைக்கு அடுத்தவாரம் அங்கீகாரம் வழங்கப்படுமெனவும், அமைச்சரவைப் பத்திரத்தை முழுமையாக ஆராயுமாறு அமைச்சர்களை வலியுறுத்துவதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார் .