SJP கட்சி தலைவர் சஜித் பிரேமதாச அவர்கள் தனக்கு வழங்கிய டீ.எஸ். சேனநாயக்க‌ கல்வி நிலையத்தின் பிரதி தலைவர் பதவியை அமைச்சர் மனோகணேசன் பறிப்பதற்கு முயற்சி செய்தார் என சமூக செயற்பாட்டாளர் கலாநிதி ஜனகன் விநாயக மூர்த்தி அவர்கள் தெரிவித்துள்ளார்.

தனியார் டிஜிட்டல் ஊடகம் ஒன்றிற்கு வழங்கிய நேர்காணலின் போது அவர் இதனை தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில்...

திரு மனோகணேசன் அவர்கள் பாதீட்டு வாசிப்பு நடந்து கொண்டிருந்த போது எனக்கு வழங்கப்பட்ட பதவி பறிக்கப்பட வேண்டும் என சஜித் பிரேமதாச அவர்கள் முன்னிலையில் கோரிக்கை விடுத்தார்.

அதாவது பாதீட்டுக்கு வாக்களிக்க வேண்டும் எனில் எனக்கு வழங்கப்பட்ட பதவியை பறிக்க வேண்டும் என்று அவர் கூறினார்.

இந்நிலையில் அரசியல் பிண்ணனியின் காரணமாகவோ அல்லது தனிப்பட்ட காழ்ப்புணர்வின் காரணமாகவோ அவர் இவ்வாறு கூறியிருக்கலாம் என தான் நம்புவதாக ஜனகன் அவர்கள் தெரிவித்தார்.

மேலும் கல்வித்துறை சார்பில் அதில் உள்ள நன்மை தீமைகளை பார்க்காது தன்னுடைய தனிப்பட்ட அரசியலுக்கு இது தடையாக வந்துவிடுமோ என எண்ணி சாதாரணமாக அதனை தடுக்காமல் பாதீட்டு வாசிப்பின் போது வலியுறுத்தியுள்ளார் எனவும் தான் நம்புவதாக அவர் தெரிவித்தார்.

இதனிடையே ஒரு தமிழனின் பதவியை இன்னொரு தமிழனே பறிக்க முயற்சிக்கின்றார் என்பது தான் கவலைக்குரிய விடயமாக உள்ளது.

நான் தேசிய ஒருமைப்பாட்டை பற்றி பேசுகின்றேன் தமிழர்கள் முஸ்லிம்கள் ஒன்றாக செயற்பட வேண்டும் என எண்ணுகிறேன் எதிர்காலத்தில் இளைஞர்களும் அந்த எண்ணத்தில் உருவாக வேண்டும் என எண்ணுகிறேன் அனாலும் பழைய அரசியல் வாதிகளின் எண்ணங்கள் அரசியலுடன் மட்டுப்படுத்தப்பட்டிருப்பது தான் கவலை அளிக்கிறது. இருப்பினும் இதனை கடந்து வரக்கூடிய வல்லமை என்னிடம் இருக்கின்றது என நம்புகிறேன். எனவே எல்லாவற்றையும் கடந்து எந்த நோக்கத்துக்காக நான் பயணிக்கின்றேனோ அந்த நோக்கத்தை சென்று அடைவேன் என்பதில் எந்த மாற்றமும் இல்லை என அவர் தெரிவித்தார்.