28 வீக்ஸ் லேட்டர், தி டவுன் உள்ளிட்ட பல ஹாலிவுட் படங்களில் நடித்துள்ள நடிகர் ஜெர்மி ரென்னர், உலகப் புகழ் பெற்ற மார்வெல்ஸின் 'அவெஞ்சர்ஸ்' படங்களில் ஹாவ்க்-ஐ கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தார்.

கடைசியாக 'க்ளாஸ் ஆனியன்' படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடித்திருந்தார். 

இந்நிலையில் அமெரிக்காவில் ஜெர்மி ரென்னர் வீடு அமைந்துள்ள ரோஸ் கி தஹோ மவுண்ட் பகுதியில் புத்தாண்டு தினத்தில் கடுமையான பனிப்புயல் வீசியது.

இதனால் அந்த பகுதியில் மின்சாரம் துண்டிக்கப்பட்டு மக்கள் கடும் அவதிக்கு உள்ளாகினர். 

இந்நிலையில் தனது வீட்டிற்கு காரில் சென்று கொண்டிருந்த ஜெர்மி ரென்னரும் பனிப்புயலில் சிக்கினார்.

படுகாயம் அடைந்து உயிருக்கு போராடிய அவரை மீட்டு விமானத்தில் மருத்துவமனைக்கு கொண்டு சேர்த்தனர்.

அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

அவர் ஆபத்தான நிலையில் இருப்பதாகவும் ஆனால் உடல்நிலை சீராக உள்ளதாகவும் மருத்துவமனை தரப்பு தெரிவித்துள்ளது.

இதனால் அவரது  ரசிகர்கள் அவர் குணமடைய பிரார்த்தனை செய்து வருகின்றனர்.