தமிழ் சினிமாவின் பிரபல நடிகர் சித்தார்த், அவ்வப்போது அவர் சமூக வலைதளங்களில் தெரிவிக்கும் கருத்துகள் சர்ச்சையாவது வழக்கம்.

இந்நிலையில் தற்போது அவர் பதிவிட்ட ஒரு இன்ஸ்டா ஸ்டோரி விவாதத்தைக் கிளப்பியுள்ளது.

மதுரை விமானநிலையத்தில் 'சிஆர்பிஎப்' அதிகாரிகள் எவ்வளவு சொல்லியும் தன்னிடம் ஆங்கிலத்தில் பேசாமல் இந்தியில் பேசி கடுமையாக நடந்து கொண்டதாக அவர் அதில் கூறியுள்ளார்.

மேலும் சி.ஆர்.பி.எப் அதிகாரிகள் தனது பெற்றோரை இந்தியில் பேச சொல்லி கட்டாயப்படுத்தியதாக தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக சமூக வலைதளத்தில் அவர் பதிவிட்டுள்ளதாவது...

கூட்டமே இல்லாத மதுரை விமானநிலையத்தில் வயதான எனது பெற்றோர், சி.ஆர்.பி.எப் அதிகாரிகளால் 20 நிமிடங்கள் துன்புறுத்தலுக்கு ஆளாகினர்.

அவர்கள் என் பெற்றோர்களிடம் பையிலிருக்கும் நாணயங்களை எடுக்க வேண்டும் என்று சொன்னார்கள்.

அவர்கள் எங்களிடம் இந்தியில் தொடர்ந்து பேசியதால் ஆங்கிலத்தில் பேசுங்கள் என்று கூறியும் தொடர்ந்து மீண்டும் மீண்டும் இந்தியில் மட்டுமே பேசினார்கள்.

அதற்கு எதிர்ப்பு தெரிவித்தபோது 'இந்தியாவில் இப்படித்தான் இருக்கும்' என்றார்கள்.

வேலையில்லாதவர்கள் எல்லாம் அதிகாரத்தைக் காட்டுகிறார்கள். இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.