மத்திய ஆக்லாந்து பூங்காவில் 56 வயதான நபர் ஒருவர் அநாகரீகமாக நடந்து கொண்டதை அடுத்து குறித்த நபரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

இவர் கடந்த 23 ஆம் திகதி கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இந்நிலையில் Mt Albert இல் உள்ள Rocket Park இல் ஒரு நபர் தன்னை மக்களுக்கு அநாகரீகமாக வெளிப்படுத்தியதாக பல புகார்கள் கிடைத்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.

கடந்த சில மாதங்களாக Rocket Park இல் நடந்த இதுபோன்ற சம்பவங்களுக்கு இதுவரை காவல்துறையில் புகார் அளிக்காத சாட்சிகளை பொலிஸார் தேடி வருகின்றனர்.

இந்நிலையில் இது தொடர்பில் தகவல் தெரிந்தவர்கள் 105 என்ற எண்ணில் காவல்துறையை தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.