Northland இல் நேற்று இரவு இடம்பெற்ற கார் விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மூவர் காயமடைந்துள்ளனர்.

Kotata Rise என்ற இடத்தில் இடம்பெற்ற இந்த விபத்து குறித்து இரவு ‌10 மணியளவில் பொலிசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

இச்சம்பவத்தில் காரில் இருந்த 3 பேருக்கு லேசான காயம் ஏற்பட்டது.

இந்நிலையில் பொலிஸார் இந்த விபத்து குறித்து விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.