Masterton இல் கார் மோதியதில் பாதசாரி படுகாயம் அடைந்தார்.

இதனையடுத்து அவர் விமானம் மூலம் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார்.

மதியம் 1.45 மணியளவில் Queen தெருவில் இடம்பெற்ற குறித்த விபத்திற்கு அவசர சேவைகள் வரவழைக்கப்பட்டன

வாகன சாரதிகள் அப்பகுதியை தவிர்க்க அறிவுறுத்தப்பட்டனர்.

இந்த விபத்து தொடர்பில் தீவிர விபத்து பிரிவுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.