Greymouth இற்கு அருகே Dobson என்ற இடத்திற்கு மேற்கே அமைந்துள்ளது Grey மாவட்டத்தில் ஏற்பட்ட காட்டுத்தீயை கட்டுபடுத்த தீயணைப்பு வீரர்கள் போராடி வருகின்றனர்.

மாநில நெடுஞ்சாலை 7 இற்கு அருகில் இன்று பிற்பகல் 3.10 மணியளவில் இந்த தீ விபத்து ஏற்பட்டதாக FENZ தெரிவித்துள்ளது.

இரண்டு ஹெலிகாப்டர்கள், மூன்று தீயணைப்பு கருவிகள் மற்றும் ஒரு தண்ணீர் டேங்கர் சம்பவ இடத்தில் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளன.

சுமார் 40 மீற்றர் முதல் 100 மீற்றர் வரை தீ பரவியதாக கூறப்படுகிறது.