சென்னையில் விறுவிறுப்பாக நடைபெற்ற ஐபிஎல் ஏலத்தில் பல முக்கிய வீரர்கள் கோடிகளில் ஏலம் எடுக்கப்பட்டனர். இதில் அதிகப்ட்சமாக கிறிஸ் மோரிஸ் ஐபிஎல் வரலாற்றில் இல்லாத அளவுக்கு ரூ.16.25 கோடிக்கு ராஜஸ்தான் ராயல்ஸ் அணியால் ஏலம் எடுக்கப்பட்டார்.
 
சில வீரர்கள்:

  • ஸ்டீவ் ஸ்மித் ரூ.2.20 கோடிக்கு ஏலம் எடுத்தது டெல்லி கேப்பிடல்ஸ் அணி
  • கிளென் மேக்ஸ்வெல்லை ரூ.14.25 கோடிக்கு ஏலம் எடுத்தது ஆர்.சி.பி
  • வங்கதேச கிரிக்கெட் அணியின் ஆல்ரவுண்டர் ஷகிப் அல் ஹசனை ரூ 3.20 கோடிக்கு ஏலம் எடுத்தது கொல்கத்தா நைட் ரைடர்ஸ்
  • இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் ஆல் ரவுண்டர் மொயின் அலியை ரூ.7 கோடிக்கு ஏலம் எடுத்தது சிஎஸ்கே
  • இளம் வீரர் ஷிவம் துபேவை ரூ.4.40 கோடிக்கு ஏலம் எடுத்தது ராஜஸ்தான் ராயல்ஸ்.
  • இங்கிலாந்து பேட்ஸ்மேன் டேவிட் மலானை ரூ.1.50 கோடிக்கு ஏலம் எடுத்தது பஞ்சாப் கிங்ஸ் அணி
  • நியூசிலாந்து வேகப்பந்துவீச்சாளர் ஆடம் மில்னேவை ரூ.3.20 கோடிக்கு ஏலம் எடுத்தது மும்பை இந்தியன்ஸ் அணி.
  • ஆஸ்திரேலிய அணியின் இளம் வேகப்பந்துவீச்சாளர் ஜை ரிச்சர்ட்சனை ரூ.14 கோடிக்கு ஏலம் எடுத்தது பஞ்சாப் கிங்ஸ்.
  • பியூஷ் சாவ்லாவை ரூ.2.40 கோடிக்கு வாங்கியது மும்பை இந்தியன்ஸ் அணி
  • ஆஸ்திரேலியாவின் கூல்டர் நைலை ரூ.5 கோடிக்கு ஏலம் எடுத்தது மும்பை இந்தியன்ஸ்
  • தமிழக கிரிக்கெட் வீரர் ஷாருக் கானை ரூ.5.25 கோடிக்கு ஏலம் எடுத்தது பஞ்சாப் கிங்ஸ் அணி.
  • கர்நாடக மாநில ஆல் ரவுண்டர் கிருஷ்ணப்ப கவுதமை ரூ9.25 கோடிக்கு அலம் எடுத்தது சென்னை சூப்பர் கிங்ஸ்.
  • இந்திய வீரர் புஜாராவை 50 லட்சம் ரூபாய்க்கு சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஏலத்தில் எடுத்தது