North Island இற்கு தவறுதலாக சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டமை தொடர்பில் தேசிய அவசரநிலை மேலாண்மை நிறுவனம் (NEMA - 
The National Emergency Management Agency) மன்னிப்பு கோரியுள்ளது.

இன்று மதியம் 1.30 மணிக்கு முன்னதாக, NEMA தனது ட்விட்டரில் பக்கத்தில் "Castlepoint அருகே ரிக்டர் அளவு நிலநடுக்கம் ஏற்பட்டதைத் தொடர்ந்து சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. #EQNZ" என பதிவிட்டது.

Castlepoint என்பது North Island இன் Wairarapa கடற்கரையில் உள்ள ஒரு சிறிய குடியேற்றமாகும்.

இந்நிலையில் சுமார் 20 நிமிடங்களுக்குப் பிறகு‌ அது தவறாக வெளியிடப்பட்டது என்று கூறி NEMA அந்த எச்சரிக்கையை நீக்கியதுடன் மன்னிப்பும் கோரியது.

ஜியோநெட்டின் கூற்றுப்படி, சமீபத்தில் Castlepoint அருகே நிலநடுக்கம் எதுவும் ஏற்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.