கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து கொழும்புக்கு வரும் விமானப் பயணிகளுக்கு ரயில் மூலம் போக்குவரத்து வசதிகளை ஏற்படுத்திக் கொடுப்பது தொடர்பில் போக்குவரத்து மற்றும் விமானப் போக்குவரத்து அமைச்சர்கள் விசேட கவனம் செலுத்தியுள்ளனர்.

போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் வெகுசன ஊடக அமைச்சர் பந்துல குணவர்தன மற்றும் துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா ஆகியோருக்கு இடையிலான விசேட சந்திப்பொன்று போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சின் கேட்போர் கூடத்தில் நேற்று இடம்பெற்றது.

கப்பல், கப்பல் போக்குவரத்து மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சின் கீழ் உள்ள கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையம் மற்றும் துறைமுகம் தொடர்பில் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சினால் நடைமுறைப்படுத்தப்படும் திட்டங்களின் எதிர்கால செயற்பாடுகள் தொடர்பில் இந்த விசேட கலந்துரையாடல் இடம்பெற்றது.

இதன் போதே கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து கொழும்புக்கு வரும் விமானப் பயணிகளுக்கு ரயில் மூலம் போக்குவரத்து வசதிகளை ஏற்படுத்திக் கொடுப்பது தொடர்பில் ஆராயப்பட்டுள் ளது.