பாடசாலை விடுமுறை நாட்களைக் குறைப்பது தொடர்பில் கல்வி அமைச்சு கவனம் தெலுத்தியுள்ளது.

அடுத்த வருடம் பாடசாலை விடுமுறையைக் குறைப்பது தொடர்பில் கவனம் செலுத்தப்படவுள்ளதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.

ஒரு வருடத்தில் சராசரியாக பாடசாலைகள் நடத்தப்பட வேண்டிய நாட்கள் 210 என்று அவர் குறிப்பிட்டார்.

அதற்கான வேலைத்திட்டம் தயாரிக்கப்படும்.

 அடுத்த வருடம் டிசம்பர் மாதத்துக்குள் அனைத்து தரங்களுக்குமான பாடத்திட்டங்களையும் உள்ளடக்குவதே இலக்காகும் என்றும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.