விஜய் டிவியில் ஒளிப்பரப்பாகி வரும் பிக்பாஸ் சீசன் 6 ல் இந்த வாரம் டபுள் எவிக்ஷன் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தற்போது கொடுக்கப்பட்டுள்ள 'டிவிங்கிள் டிவிங்கிள் பெரிய ஸ்டார் நீங்க ஆகப்போறீங்க மக்களின் ஸ்டார்' என்ற டாஸ்க்கில் ஹவுஸ்மேட்ஸ் தங்களின் திறமையை காண்பித்து கலக்கி வருகின்றனர்.

இந்த வார நாமினேஷனில் அசீம், ஜனனி, கதிரவன், ஏடிகே, ஆயிஷா, ராம் ஆகிய 6 பேர் இடம் பெற்றுள்ளனர். இவர்களின் ஆயிஷா மற்றும் ராம் இருவரும் டேஞ்சர் ஸோனில் இருப்பதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் டிஸ்னி ஹாட்ஸ்டார் டுவிட்டர் பக்கத்தில் பிக்பாஸ் வீட்டிற்குள் எண்ட்ரி ஆக போவது யார் என நினைக்கிறீர்கள் எனக்கேட்டு பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளது.

இது வைல்ட்கார்ட் எண்ட்ரியா அல்லது கெஸ்ட் யாராவது வருகிறார்களா? என குறிப்பிடவில்லை.

ஆனால் நடிகை அஞ்சலி தான் 'Fall' என்ற வெப் சீரிஸின் புரமோஷனுக்காக பிக்பாஸ் வீட்டுக்குள் வரப்போவதாக கூறப்படுகிறது.

இந்த வெப் தொடர் வருகிற டிசம்பர் 9 ஆம் திகதி டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் வெளியாக உள்ளது.

ஏற்கனவே கடந்த சீசன் பிக்பாஸ் நிகழ்ச்சிகளில் புரோமோஷனுக்காக திரைப்பிரபலங்கள் சர்ப்ரைஸாக பிக்பாஸ் வீட்டுக்குள் சென்று தங்களது படத்தை புரமோட் செய்தனர்.

அந்த வகையில் தற்போது அஞ்சலி 'Fall' என்ற வெப் சீரிஸின் புரமோஷனுக்காக பிக்பாஸ் வீட்டுக்குள் நுழைய போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை கிளப்பியுள்ளது.