பிக்பாஸ் வீட்டில் இந்த வாரம் வீக்ளி டாஸ்க்காக Individual Performance டாஸ்க் கொடுக்கப்பட்டுள்ளது.

டிவிங்கிள் டிவிங்கிள் பெரிய ஸ்டார்... நீங்க ஆகப் போறீங்க மக்களின் ஸ்டார் என்ற தலைப்பில் ஒவ்வொரு ஹவுஸ்மேட்டுக்கும் ஒரு கேரக்டர் கொடுக்கப்பட்டுள்ளது.

அதற்கான கெட்டப்பில் கெத்தாய் சுற்றி வரும் ஹவுஸ் மேட்ஸ் தங்களின் அசத்தல் பர்ஃபாமன்ஸையும் காட்டி வருகின்றனர்.

வாரம் முழுக்க நடைபெறும் இந்த டாஸ்க்கின் இறுதியில் அதிக சன்மானம் பெறும் போட்டியாளர் வெற்றியாளராக அறிவிக்கப்படுவார்.

இந்நிலையில் இன்றைய எபிசோடுக்கான மூன்றாவது புரமோ வெளியாகியுள்ளது.

இந்த புரமோ முழுவதும் விஜே கதிரை ஃபோகஸ் செய்துள்ளது.

இதில் மைக்கேல் ஜாக்ஸன் கெட்டப்பில் உள்ள கதிர், அவரைப் போலவே நடனமாடி அசத்தியுள்ளார்.

ஒவ்வொரு ஸ்டெப்பிலும் வித்தியாசத்தை காட்டி வியக்க வைத்துள்ளார் கதிர்.

கதிரின் பர்ஃபாமன்ஸை பார்த்த நெட்டிசன்கள் கதிரா இது என கேட்டு வாயை பிளந்துள்ளனர்.

முன்னதாக அவர் சேஃப் கேம் ஆடுகிறார் என நெட்டிசன்கள் விமர்சித்து வந்தனர். கோர்ட் ரூம் டாஸ்க்கின் போது கூட மற்றவர்களிடம் சண்டை போடாமல் நழுவிய கதிரை நடிகர் கமல்ஹாசனே சேஃப் கேம் ஆடாதீர்கள் என எச்சரித்தார்.

இந்நிலையில் இன்று தனது திறமையை காட்டிய கதிரை பார்த்த நெட்டிசன்கள், திறமை இருக்கும் போது மற்றவர்களிடம் சண்டை போட வேண்டிய தேவையில்லை.

உங்களின் திறமை உங்களுக்காக சண்டை போடும். உங்களை வெற்றி பெற செய்யும் என புகழ்ந்து வருகின்றனர்.

இறுதியாக தனது தொப்பியில் தனக்கான சன்மானத்தை வசூல் செய்கிறார் கதிர். அதில் 8000 ரூபாய் என அதிக அளவு அமொவுண்ட் வசூலாகியிருப்பது தெரியவந்துள்ளது.

பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்ற நாள் முதல் இன்றுதான் பார்வையாளர்களை திருப்தி படுத்தியுள்ளார் கதிர்.

கதிரவன் பிக்பாஸ் வீட்டில் யாரிடமும் பெரிதாக இதுவரை சண்டை போட்டதில்லை. தான் உண்டு தன் வேலை உண்டு என்றே இருக்கிறார்.