தென் கொரிய நாடகம் பார்த்ததாக இரு சிறுவர்களுக்கு வட கொரியா ராணுவம் மரண தண்டனை நிறைவேற்றியதாக ஒரு அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

வட கொரியா அதிபரான கிம் ஜங் உன் கடந்த ஆண்டு
கடுமையான சட்டத்தை அமல்படுத்தினார்.

அதில் தங்கள் எதிரி நாடான தென் கொரியா திரைப்படங்கள், நாடகங்கள், இசை
ஆகியவற்றின் வீடியோ மற்றும் CD விற்பனை செய்தல்
அல்லது அப்படங்களை பார்த்த குற்றங்களுக்குப் பொதுமக்கள் முன்னிலையில் மரண தண்டனை நிறைவேற்றப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் வடகொரியாவைச் சேர்ந்த 16 மற்றும் 17 வயதுடைய இரு சிறுவர்கள் தென் கொரியா நாடகம் பார்த்ததாகக் கடந்த ஒக்டோபர் மாதம் அந்நாட்டு ராணுவத்திடம் சிக்கினர்.

மேலும் இவர்கள் மீது விசாரணை நடைபெற்று வந்த நிலையில் குற்றச்சாட்டு நிருபனமானதையடுத்து ரியாங்க்காங் மாகாணத்தில் வைத்து பொதுமக்கள் மத்தியில் இரு சிறுவர்களும் துப்பாக்கியால் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

அத்துடன் வட கொரியாவின் இச்செயலுக்கு மனித உரிமை அமைப்புகள் கண்டனம் தெரிவித்துள்ளது.