2017 இல் ஆக்லாந்தில் திருடப்பட்ட தொன்மையான இரண்டு Gottfried Lindauer சித்திரங்களை பொலிஸார் தற்போது மீட்டுள்ளனர்.

அவை திருடப்பட்ட நேரத்தில் அதன் மதிப்பு 1 மில்லியன் டொலர்கள் என கூறப்படுகிறது.

1884 ஆம் ஆண்டில் போஹேமியன்-நியூசிலாந்து கலைஞர் ஒருவர் Chieftainess Ngatai–Raure மற்றும்  Chief Ngatai-Raure ஐ சித்திரமாக வரைந்தார்.

அவை ஏப்ரல் 1, 2017 அன்று பார்னெல் சாலையில் உள்ள கலைக்கூடத்தில் இருந்து திருடப்பட்டன.

துப்பறியும் இன்ஸ்பெக்டர் ஸ்காட் பியர்ட், தற்போது அந்த ஓவியங்கள் அவற்றின் உரிமையாளரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக கூறினார்.

ஆனால் அவைகள் சிறிய சேதங்களுக்கு உள்ளாகியுள்ளன. இது கொள்ளையின் போது நிகழ்ந்ததாக பொலிஸார் நம்புகின்றனர்.

திருட்டில் ஈடுபட்டவர்களை அடையாளம் காணும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

"இந்த ஓவியங்கள் திருடப்பட்ட ஐந்து ஆண்டுகளுக்கு பின் காவல்துறையினரால் திரும்பப் பெற முடிந்தது என்பது நம்பமுடியாத அதிர்ஷ்டம்." என பியர்ட் தெரிவித்தார்.