ஒரு தம்பதியினர் தங்கள் 4 மாத குழந்தைக்கு உடனடியாக இதயத்தில் அறுவை சிகிச்சை செய்ய வேண்டி இருப்பதாகவும், ஆனால் அறுவை சிகிச்சைக்கு தேவையான இரத்தத்தை தடுப்பூசி செலுத்தியவர்களிடம் இருந்து பெறுவதில் தங்களுக்கு உடன்பாடு இல்லை எனவும் கூறிய பெற்றோர் மீது Health NZ நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.

அதில் குழந்தையின் பாதுகாவலாராக இருக்கும் உரிமையை அந்த பெற்றோரிடம் இருந்து பறித்து, நீதிமன்றம் அந்த உரிமையை ஏற்றுக்கொள்ள வேண்டும் எனவும், இதன் மூலம் குழந்தைக்கு உடனடியாக அறுவை சிகிச்சை மேற்கொள்ள முடியும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த வழக்கின் மீதான விசாரணை நேற்று ஆக்லாந்து உயர் நீதிமன்றத்தில் இடம்பெற்றதை அடுத்து அவசரமாக இதய அறுவை சிகிச்சை தேவைப்படும் குழந்தைக்கு அறுவை சிகிச்சை முடிந்து அறுவை சிகிச்சைக்குப் பின் குணமடையும் வரை உயர் நீதிமன்றம் பாதுகாவலராக பொறுப்பேற்றுள்ளது.

மேலும் அறுவை சிகிச்சைக்கு தடுப்பூசி போடாத நன்கொடையாளரிடமிருந்து இரத்தத்தை எடுக்க நியூசிலாந்து இரத்த தான சேவையை கட்டாயப்படுத்துமாறு குடும்பத்தின் வழக்கறிஞர் விடுத்த கோரிக்கை நிராகரிக்கப்பட்டது.

தடுப்பூசி போடப்பட்ட மற்றும் தடுப்பூசி போடாத நன்கொடையாளர்களுக்கு இடையே இந்த சேவை எந்த வித்தியாசத்தையும் ஏற்படுத்தாது மேலும் கூடுதல் ஆபத்து எதுவும் இல்லை என்று நீதிமன்றம் கூறியது.