ஆக்லாந்தின் புறநகர்ப் பகுதியான Point Chevalier இல் இன்று காலை ஒரு வீட்டில் ஏற்பட்ட தீ விபத்தில் ஒரு குழந்தை படுகாயமடைந்துள்ளது.

காலை 10.30 மணிக்குப் பிறகு Rama தெருவில் இடம்பெற்ற குறித்த தீ விபத்து சம்பவத்திற்கு அவசர சேவைகள் வரவழைக்கப்பட்டன.

தீயணைக்கும் வாகனங்கள் சம்பவ இடத்தில் உள்ளன.

வீடு சுற்றி வளைக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் St John ஆம்புலன்ஸ் சேவை செய்தித் தொடர்பாளர் கூறுகையில், இரண்டு ஆம்புலன்ஸ்கள் குறித்த வீட்டிற்கு அனுப்பப்பட்டன.

மோசமான காயங்களுடன் ஒரு குழந்தை ஸ்டார்ஷிப் குழந்தைகள் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டதாக கூறினார்.