Breaking News

நியூசிலாந்தின் பிரபல இசைக்கலைஞர் Hamish Kilgour சடலமாக மீட்பு...!!

நியூசிலாந்தின் பிரபல இசைக்கலைஞர் Hamish Kilgour சடலமாக மீட்பு...!!

நியூசிலாந்தின் பிரபல இசைக்கலைஞர் Hamish Kilgour உயிரிழந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இவர் The Clean என்ற Dunedin band குழுவை 1970 ஆம் ஆண்டு இணைந்து நிறுவியவர் ஆவார்.

மேலும் இந்த Band குழு மற்றும் Hamish Kilgour இன் பெயர் கடந்த 2017 ஆம் ஆண்டு New Zealand Music Hall of Fame பட்டியலில் சேர்க்கப்பட்டது.

இந்நிலையில் நவம்பர் 27 ஆம் திகதி அன்று கிறிஸ்ட்சர்ச்சில் உள்ள The Palms ஷாப்பிங் சென்டரில் அவர் காணாமல் போனதாக காவல்துறைக்கு அறிவிக்கப்பட்டது.

இதனையடுத்து பொலிஸார் அவரை தீவிரமாக தேடி வந்த நிலையில் தற்போது அவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில் அவரது மரணம் தொடர்பிலான விசாரணைகள் மரண விசாரணை அதிகாரியிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார்.