Breaking News

வெலிங்டன் - Karaka Bay இல் காணாமல் போன நீர்மூழ்கி வீரர் சடலமாக மீட்பு..!!

வெலிங்டன் - Karaka Bay இல் காணாமல் போன நீர்மூழ்கி வீரர் சடலமாக மீட்பு..!!

வெலிங்டனில் உள்ள Karaka Bay இல் நேற்று டைவிங் செய்து கொண்டிருந்த போது காணாமல் போனதாகக் கூறப்படும் நபர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

நேற்று மாலை 6 மணியளவில் குறித்த நீர்மூழ்கி வீரர் காணாமல் போனதாக கூறப்படுகிறது.

கடல்சார் பிரிவு மற்றும் காவல்துறை தேசிய டைவ் ஸ்குவாட், கடலோர காவல்படை, சர்ப் லைஃப்சேவிங் மற்றும் ஹெலிகாப்டர் ஆகியவற்றை உள்ளடக்கிய காவல்துறை அதிகாரிகள் குழு நேற்று வான்வழி மற்றும் நீர் வழி சோதனையை மேற்கொண்டனர்.

இன்று காலை மீண்டும் தேடுதல் வேட்டை தொடங்கிய சிறிது நேரத்திலேயே குறித்த நபரை அவர்கள் சடலமாக கண்டுபிடித்தனர்.

இந்நிலையில் இந்த மரணம் தொடர்பில் மரண விசாரணை அதிகாரிக்கு பரிந்துரைக்கப்படும் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.