Dairy shop மற்றும் வணிக உரிமையாளர்கள் இன்று ஆக்லாந்து, ஹமில்டன் மற்றும் கிறிஸ்ட்சர்ச் வீதிகளில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

கடந்த மாதம் 23 ஆம் திகதி Sandringham Dairy Shop கொள்ளை சம்பவத்தில்
ஜனக் படேல் என்ற நபர் கத்தியால் குத்திக் கொள்ளப்பட்ட நிலையில் அவரது மரணத்திற்கு நீதி கோரி இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

ஆக்லாந்தில் கிட்டத்தட்ட 200 பேர் Britomart இல் இருந்து Queen ஸ்ட்ரீட் வழியாக போக்குவரத்தைத் தடுத்து, சுமார் 30 நிமிடங்களுக்குப் பிறகு Aotea சதுக்கத்திற்கு வந்து "எங்களுக்கு நீதி வேண்டும்" மற்றும் "சட்டத்தை மாற்றுங்கள்" என்று கோஷமிட்டனர்.

இன்றைய ஆர்ப்பாட்டத்தில் கூடியிருந்தவர்கள், குற்றத்தை எதிர்த்துப் போராடுவதற்கான நடவடிக்கையின் பற்றாக்குறை மற்றும் குற்றவாளிகளைத் தடுக்க தற்போதைய தண்டனைகள் போதுமானதாக இல்லை என்று தங்கள் விரக்தியை வெளிப்படுத்தினர்.