நியூசிலாந்திற்கான இந்திய உயர் ஸ்தானிகர் திருமதி நீதா பூஷன் கடந்த நவம்பர் 29 ஆம் திகதி ஆக்லாந்தின் Mahatma Gandhi Centre மற்றும் ஆக்லாந்து இந்திய சங்கத்திற்கு முதல் முறையாக விஜயம் செய்தார்.

முதலில் இவர் Radha Krishna Mandir இல் தரிசனம் செய்தார்.

பின்னர் பாதிரியார் Rev Devrambhai Rawal அவரை வரவேற்று, மந்திரங்களை ஓதி அவர் சார்பாக ஒரு சிறிய பூஜை செய்தார்.

மேலும் உயர் ஸ்தானிகருடன் ஆக்லாந்தில் உள்ள இந்திய கௌரவ தூதர் Bhav Dhillon மற்றும் ஆக்லாந்து இந்திய சங்கத்தின் தலைவர் Dhansukhbhai Lal தலைமையிலான குழு உறுப்பினர்கள் இருந்தனர்.

ஆக்லாந்து இந்திய சங்கத்தின் பல செயல்பாடுகள் பற்றிய விளக்கங்களை திருமதி பூஷன்  ஆர்வத்துடன் கேட்டதோடு அமைப்பின் செயல்பாடுகள் குறித்தும் பல கேள்விகளைக் கேட்டார்.

மேலும் கொவிட் நெருக்கடியின் போது ஆக்லாந்து இந்திய சங்கம் மற்ற இந்திய சமூக அமைப்புகள் மற்றும் இந்திய உயர் ஸ்தானிகராலயத்துடன் இணைந்து செய்த பணிகளை அவர் பாராட்டினார்.

உயர் ஸ்தானிகர் மற்றும் கெளரவ தூதரை வரவேற்க, இந்திய சங்கத்தின் தலைவர் தலைவர் தன்சுக்லால் மற்றும் மூன்று முன்னாள் தலைவர்கள் - நரேந்திர பனா, அசோக் தாஜி கெய்வாலா மற்றும் ஹர்ஷத் படேல் ஆகியோர் கலந்துகொண்டனர்.

இது தன்னலமின்றி ஒன்றிணைந்து செயல்படும் அமைப்பின் ஒருங்கிணைப்பு மற்றும் மனப்பான்மைக்கு ஒரு சான்றாகும்.

Mohan Nadkarni Foundation உடன் சங்கத்தின் கூட்டு முயற்சியான இந்திய கலை நிகழ்ச்சிகளுக்கான மையத்தின் (CIPA) செயல்பாடுகள் குறித்தும் சங்கத்தின் தலைவர் மற்றும் குழு உறுப்பினர்கள் உயர் ஆணையரிடம் விளக்கினர்.

உயர் ஸ்தானிகர் திருமதி பூஷன் சங்கத்திற்கு நல்வாழ்த்துக்களைத் தெரிவித்ததுடன், உயர் ஸ்தானிகராலயம் சங்கத்துடன் நெருக்கமாகப் பணியாற்ற எதிர்பார்த்துள்ளதாகவும் கூறினார்.

இதனையடுத்து, உயர் ஸ்தானிகர் மற்றும் கெளரவ தூதர் ஆகியோர் Dairy Shop கொள்ளை சம்பவத்தில் ஜனக் படேல் துரதிர்ஷ்டவசமாக கொல்லப்பட்ட Rose Cottage Superette ஐ பார்வையிட்டனர்.

உயர் ஸ்தானிகர் மறைந்த ஜனக் படேலின் ஆன்மாவுக்கு அஞ்சலி செலுத்தினார் மற்றும் Dairy Shop இற்கு வெளியே வெளியே மலர்களை வைத்தார்.

அந்த இடத்தில் இருந்த ஜனக் படேலின் நெருங்கிய குடும்ப உறுப்பினர் ஈஸ்வர்பாய் மற்றும் குடும்ப நண்பர் வினோத் குமார் ஆகியோரை அவர் சந்தித்தார்.

திருமதி பூஷன் தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்தார் மற்றும் உயர் ஸ்தானிகராலயத்தின் ஆதரவை உறுதிப்படுத்தினார்.

Thanks for the news - Indian Newslink