ஆக்லாந்தின் புறநகர் பகுதியான Ōtāhuhu வில் கடுமையான வாகன விபத்து ஒன்று இடம்பெற்றுள்ளது.

Salesyards சாலையில் இந்த விபத்து மாலை 6.50 மணியளவில் பதிவாகியுள்ளது.

இந்நிலையில் குறித்த விபத்தில் படுகாயமடைந்த ஒருவர் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சாலை மூடப்பட்டு, சம்பவ இடத்தில் மாற்றுப்பாதை அமைக்கப்பட்டது.

வாகன சாரதிகள் அப்பகுதியை தவிர்க்க அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.