கிறிஸ்ட்சர்ச்சில் உள்ள Gun City கடையில் ஒரு கொள்ளை சம்பவம் இடம்பெற்றுள்ளது.

அதிகாலை 3.20 மணியளவில் திருடப்பட்ட பச்சை நிற Mazda Demio கார் ஒன்று, Cranford  தெருவில் உள்ள குறித்த Gun City கடையின் கதவை உடைக்க பயன்படுத்தப்பட்டது.

என்னென்ன பொருட்கள் திருடப்பட்டன என்பதை மதிப்பிட பொலிஸார் பணியாற்றி வருகின்றனர்.

மேலும் இந்த கொள்ளை சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதனிடையே அதிகாலை 5.20 மணியளவில் Marshland சாலையில் உள்ள ஒரு விளையாட்டு பொருட்கள் கடையும் கொள்ளையடிக்கப்பட்டது.

இந்த கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட மூன்று பேர் ஒரு சிறிய கருப்பு காரில் புறப்பட்டு சென்றதாக போலீசார் தெரிவித்தனர்.

இந்நிலையில் இந்த இரண்டு கொள்ளை சம்பவங்கள் குறித்தும் பொலிஸார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.