உலகின் மிகப்பெரிய பயணிகள் விமானமான, எமிரேட்ஸின் ஏர்பஸ் ஏ380 இரண்டு ஆண்டுகளுக்கு பின் வழக்கமான சேவைக்காக நியூசிலாந்தை வந்தடைந்தது.

துபாயில் இருந்து குறித்த விமானம் இன்று காலை ஆக்லாந்தில் தரையிறங்கியது.

நியூசிலாந்தில் கொவிட்-19 கட்டுப்பாடுகள் இல்லாமல் 2020 ஆம் ஆண்டுக்கு பின்னர் இந்த கோடையில் சர்வதேச பயணங்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் வருகை தர அனுமதிக்கப்படுகிறது.

அந்த வகையில் எமிரேட்ஸ் ஆக்லாந்தில் இருந்து துபாய்க்கு நேரடி A380 விமான சேவைகளை மீண்டும் தொடங்க உள்ளது

எமிரேட்ஸ் NZ பிராந்திய மேலாளர் கிறிஸ் லெத்பிரிட்ஜ் கூறுகையில்..

"இந்த பெரிய விமானத்தின் வருகை சர்வதேச பயணிகள் நியூசிலாந்திற்குத் வர தயாராக இருப்பதைக் காட்டுகிறது"

"நியூசிலாந்திற்கு A380 திரும்புவதைப் பார்ப்பது எங்களுக்கு மிகவும் சிறப்பான தருணம், மேலும் அதன் வருகை நியூசிலாந்தின் சுற்றுலா துறை இயல்பு நிலைக்குத் திரும்புவதில் குறிப்பிடத்தக்க மைல்கல்லாக இருக்கும்" என அவர் தெரிவித்தார்.