இன்று பிற்பகல் ஆக்லாந்தின் LynnMall ஷாப்பிங் சென்டருக்குள் கத்தியை ஏந்தியவாறு காணப்பட்ட நபர் ஒருவர் கைது செய்யப்பட்டார்.

கத்தியுடன் ஒரு நபர் ஷாப்பிங் சென்டருக்கு உள்ளே இருப்பதாக 
மாலை 4 மணியளவில் காவல்துறைக்கு தகவல் வழங்கப்பட்டது.

சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் எந்த அசம்பாவிதமும் இல்லாமல் அந்த நபரை விரைவாக கைது செய்தனர்.

யாருக்கும் காயங்கள் ஏற்பட்டதாக எந்த தகவலும் இல்லை.