மில்லியன் கணக்கான ஆஸ்திரேலியர்கள் பயன்படுத்தும் பிரபலமான Vicks VapoRub தைலத்தின் நூற்றுக்கணக்கான ஜாடிகள் தவறாக லேபிள் இடப்பட்டதால் அவற்றை திரும்பப் பெறும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இந்த தயாரிப்பு இருமல் மற்றும் காய்ச்சல் அறிகுறிகளை அகற்றுவதை நோக்கமாகக் கொண்ட ஒரு தைலம் ஆகும்.
இந்நிலையில் Vicks VapoRub Xtra Strong இன் சில 100 கிராம் ஜாடிகள் Vicks VapoRub என தவறாக லேபிள் இடப்பட்டுள்ளது.
Vicks VapoRub Xtra Strong சிலருக்கு ஒவ்வாமை எதிர்வினைகளை ஏற்படுத்தும்.
அதாவது சொறி, கொப்புளங்கள், படை நோய், அரிப்பு அல்லது வீக்கம் போன்றவை என தயாரிப்பு நிறுவனமான Procter & Gamble Australia தெரிவித்துள்ளது.
மேலும் ஆறு முதல் பத்து வயது வரையிலான குழந்தைகள் இதனை உள்ளிழுப்பதால் பாதகமான எதிர்விளைவுகள் ஏற்படும் அபாயம் உள்ளது.
இந்நிலையில் தவறான லேபிளிடப்பட்ட ஜாடிகள் 100 கிராம் மற்றும் தொகுதி எண் 222605 ஆகும்.
குறித்த ஜாடிகள் சிவப்பு நிற மூடி மற்றும் Vicks VapoRub களிம்பு 100 கிராம் என்ற லேபிளைக் கொண்டிருக்கும்.
இந்த தயாரிப்புகள் NSW, Victoria மற்றும் Tasmania வில் உள்ள வாடிக்கையாளர்களுக்கு விற்கப்பட்டதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் பொருளை வாங்கிய இடத்திற்கே திருப்பி அனுப்ப வேண்டும் என மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மேலும் Procter & Gamble Australia ஐ 1800 028 280 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என கூறப்பட்டுள்ளது.
"Procter and Gamble Australia Pty Ltd எங்கள் வாடிக்கையாளர்களுக்கும் நுகர்வோருக்கும் ஏற்பட்ட சிரமத்திற்கு மனப்பூர்வமாக வருந்துகிறது" என்று நிறுவனத்தின் செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார்