நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் இயக்குனர் பி.வாசு இயக்கத்தில் வெளியாகி சூப்பர் ஹிட் ஆன திரைப்படம் சந்திரமுகி.

இந்த படத்தின் 2 ஆம் பாகம் 17 வருடங்களின் பின்னர் 'சந்திரமுகி 2' என்ற பெயரில் பிரமாண்டமாக உருவாகிறது.

பி.வாசு இயக்கும் இப்படத்தில் ராகவா லாரன்ஸ் கதாநாயகனாக நடிக்கிறார்.

முக்கிய கதாபாத்திரத்தில் வடிவேலு நடிக்கிறார்.

இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றது.

இதனிடையே 'சந்திரமுகி 2' ல் ஜோதிகா கதாபாத்திரத்தில் யார் நடிக்கப் போகிறார் என்ற கேள்வி ரசிகர்கள் மத்தியில் எழுந்து வந்த நிலையில் பிரபல பாலிவுட் நடிகையான கங்கனா ரனாவத் அந்த கதாபாத்திரத்தில் நடிக்கிறார் என தகவல் வெளியாகியுள்ளது.