பின்லாந்து பிரதமர்‌ Sanna Marin உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு நேற்று நியூசிலாந்தை வந்தடைந்தார்.

இந்நிலையில் பிரதமர் Marin மற்றும் பிரதமர் Jacinda Ardern இன்று காலை ஆக்லாந்தில் ஒன்றாக இணைந்து செய்தியாளர் சந்திப்பை நடத்தினர்.

இரு நாட்டு பிரதமர்களும் நேரில் சந்திப்பது இதுவே முதல் முறையாகும்.

பிரதமர் ஆர்டெர்ன் இந்த விஜயத்தை "ஒரு வரலாற்று நிகழ்வு" என்று கூறினார்.

பிரதமர் ஆடர்ன் மேலும் கூறுகையில்...

“பிரதமருடன் இன்று நான் நடத்திய உரையாடல் நியூசிலாந்துக்கும் பின்லாந்துக்கும் இடையிலான அன்பான உறவை உறுதிப்படுத்தியுள்ளன”

"நியூசிலாந்து மற்றும் பின்லாந்து ஆகிய இரண்டும் ஜனநாயக விழுமியங்கள், பன்முகத்தன்மை மற்றும் விதிகள் அடிப்படையிலான சர்வதேச ஒழுங்கு ஆகியவற்றிற்கு வலுவான அர்ப்பணிப்பைப் பகிர்ந்து கொள்கின்றன"

"சர்வதேச விதிகள் மற்றும் அவற்றின் அடிப்படையிலான மதிப்புகளை ஆதரிப்பதற்கு நாம் ஒன்றிணைந்து செயல்படுவது முன்னெப்போதையும் விட முக்கியமானது"

எங்கள் இரு நாடுகளும் புடினின் உக்ரைன் மீதான சட்டவிரோதப் போரைக் கண்டிப்பது சந்தேகத்திற்கு இடமின்றிய விடயம்" என்று ஆர்டெர்ன் கூறினார்.

மேலும் ஈரானில் பெண்கள் மற்றும் சிறுமிகள் எதிர்கொள்ளும் கடுமையான நிலைமை குறித்தும் இருவரும் விவாதித்ததாக பிரதமர் ஆடர்ன் கூறினார்.

அமைதியான எதிர்ப்பாளர்களுக்கு எதிராக வன்முறை பயன்படுத்தப்படுவதும், எதிர்ப்பாளர்களுக்கு வழங்கப்படும் மரண தண்டனையும் வெறுக்கத்தக்கது.

"இது மற்றும் பல பிரச்சினைகளில் நாங்கள் தொடர்ந்து இணைந்து பணியாற்றுவோம் என்பது எனது நம்பிக்கை" என‌ பிரதமர் ஆடர்ன் மேலும் தெரிவித்தார்.

இதனிடையே நியூசிலாந்திற்கு வருகை தந்ததில் தான் மிகவும் மகிழ்ச்சி அடைவதாக பிரதமர் மரின் கூறினார்.

மேலும் ஒரு pōwhiri ஆல் (மவோரி வரவேற்பு நிகழ்வு) வரவேற்கப்பட்டது ஒரு பாக்கியம் என்று கூறினார்.

பெண்களுக்கு முழு அரசியல் உரிமைகளை வழங்கிய முதல் நாடுகளான பின்லாந்து மற்றும் நியூசிலாந்தின் வரலாறுகளை அவர் சுட்டிக்காட்டினார்.

நமது நாடுகள் இன்று உலகின் மிகவும் முன்னேறிய பொருளாதாரம் மற்றும் சமமான சமூகங்களில் ஒன்றாக இருப்பது தற்செயல் நிகழ்வு அல்ல.

"இறுதியாக, மிக முக்கியமாக, உக்ரைனுக்கு ஆதரவாக எங்கள் முயற்சிகளைத் தொடர வேண்டும்"

"உக்ரைனுக்கு எதிரான ரஷ்யாவின் சட்டவிரோத மற்றும் மிருகத்தனமான போர் உக்ரைன் நிர்ணயித்த விதிமுறைகளின்படி முடிவுக்கு வர வேண்டும்," என்று அவர் கூறினார்.

"எனது வருகை, ஏற்கனவே உள்ள எங்களின் சிறந்த உறவுகளை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்லும் என்று நம்புகிறேன்." என அவர் மேலும் தெரிவித்தார்.