கடந்த ஆகஸ்ட் மாதம் தெற்கு ஆக்லாந்தில் சூட்கேஸில் இரண்டு குழந்தைகளின் எச்சங்கள் மீட்கப்பட்ட சம்பவம் தொடர்பில்‌ தென் கொரியாவில் கைது செய்யப்பட்டு நியூசிலாந்துக்கு நாடு கடத்தப்பட்ட பெண் இன்று ஆக்லாந்தில் உள்ள நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.

குறித்த பெண் தனது இரண்டு குழந்தைகளை கொலை செய்த குற்றச்சாட்டில் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.

இந்த பெண் செப்டம்பர் மாதம் தென் கொரியாவில் கைது செய்யப்பட்டு காவலில் வைக்கப்பட்டு நேற்று பிற்பகல் மூன்று காவல்துறை அதிகாரிகளால் ஆக்லாந்திற்கு அழைத்து வரப்பட்டார்.

இன்று காலை அவர் Manukau மாவட்ட நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டதை அடுத்து மீண்டும் அடுத்த மாதம் உயர்நீதிமன்றத்தில் ஆஜராகும் வரை சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில் 42 வயதான குறித்த பெண்ணின் பெயரை வெளியிடாமல் இருப்பதற்கான தற்காலிக அனுமதியை நீதிமன்றம் வழங்கியுள்ளது.

அவர் நீதிமன்றத்தில் ஒரு மொழிபெயர்ப்பாளர் மூலம் உரையாற்றினார்.

நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவதற்கு முன்பு அவர் நேற்றைய தினம் இரவு Manukau காவல் நிலையத்தில் இருந்தமை குறிப்பிடத்தக்கது