நியூசிலாந்து ராயல் ஹெர்குலிஸ் விமானத்தில் இன்று காலை ஒரு இன்ஜின் செயலிழந்ததை அடுத்து ஆக்லாந்தின் Whenuapai விமான தளத்தில் அவசரமாக தரையிறக்கப்பட்டது.

அந்த விமானம் Whenuapai இல் உள்ள RNZAF தளத்தில் இருந்து புறப்பட்டு சென்ற போது இச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

நியூசிலாந்து பாதுகாப்புப் படையின் (NZDF) செய்தித் தொடர்பாளர் கூறுகையில், "குறித்த சம்பவத்தின் போது தீ எச்சரிக்கைக்கு பதிலளிக்கும் விதமாக ஒரு தீயணைப்பு இயந்திரத்தை பணியாளர்கள் நிறுத்தினர்.

விமானத்தில் தீ இல்லை, விபத்து இல்லாமல் விமானம் தரையிறங்கியது.  தற்போது விசாரணை நடத்தப்பட்டு வருகிறது என தெரிவித்தார்.

"குழுவினர் அவர்களின் பயிற்சியின்படி எல்லா நேரங்களிலும் சரியான நடைமுறையைப் பின்பற்றினர்" என்று NZDF செய்தித் தொடர்பாளர் கூறினார்.