பிரதமர் ஜசிந்தா ஆர்டெர்ன் இந்த கோடை விடுமுறையில் தனது திருமணத்தை நடத்த எந்த திட்டங்களும் இல்லை எனவும் மற்றும் வழமையாக கோடை காலத்தில் மேற்கொள்ளும் ஆஸ்திரேலிய பயணத்தை இம்முறை மேற்கொள்ளப்போவது இல்லை எனவும் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் இந்த கோடை விடுமுறையில் குடும்பத்துடன் நேரத்தை செலவிட உள்ளதாக அவர் தெரிவித்தார்.

சமீபத்திய குடும்பப் போராட்டங்கள் வீட்டில் இருக்க வேண்டிய அவசியத்தை வெளிப்படுத்தியதாகக் கூறினார்.

"அப்பாவுக்கு கடந்த ஆண்டு புற்றுநோய் ஏற்பட்டது, அது கொஞ்சம் கடினமாக இருந்தது," என்று நியூசிலாந்து வுமன்ஸ் வீக்லிக்கு அவர் கூறினார்.

ஆர்டெர்னின் தாயார் லாரெலும் பல ஆண்டுகளுக்கு முன்பு மார்பக புற்றுநோயால் பாதிக்கப்பட்டு பின்னர் முழுமையாக குணமடைந்தார்.

பிரதமர் ஆர்டெர்ன் ஆஸ்திரேலியாவில் ஒரு வழக்கமான பயணி மற்றும் அங்கு விடுமுறையை கழிப்பவர்.

கடந்த கால ஆஸ்திரேலிய பயணங்களில் அவர் சிட்னி மற்றும் சன்ஷைன் கோஸ்ட் அருகே தங்கியிருந்தார்.

மற்றும் ஆஸ்திரேலியாவின் உள்ள குடும்ப உறுப்பினர்களை சந்தித்தார்.

இரண்டு ஆண்டுகள் கொவிட் பரவல் காரணமாக எல்லைகள் மூடப்பட்டதை அடுத்து பிரதமர் ஆடர்னும் அனைத்து நியூசிலாந்தர்களைப் போலவே 2020 மற்றும் 2021 இல் தனது ஓய்வு நேரத்தை வீட்டிலேயே கழித்தார்.

இது "நியூசிலாந்தில் கோடைகாலத்தை நான் எவ்வளவு ரசிக்கிறேன் என்பது கொவிட் எனக்குக் காட்டிய விடயங்களில் ஒன்று," என்று அவர் கூறினார்.

"ஓய்வெடுக்க நான் நாட்டை விட்டு வெளியேற வேண்டும் என்ற எண்ணம் எனக்கு இருந்தது ஆனால் கொவிட் பரவலை அடுத்து அது ஒரு விருப்பமாக இல்லை. கொவிட் எனக்குக் கற்றுக் கொடுத்தது என்னவென்றால், நான் இங்கே குடும்பத்துடன் ஒரு சிறந்த விடுமுறையைக் கொண்டாட முடியும், அது ஒரு உண்மையான விடுமுறையாக உணர்கிறேன்" என‌ தெரிவித்தார்.

மேலும் பிரதமர் ஆர்டெர்ன் தனது வருங்கால கணவர் கிளார்க் கேஃபோர்டை திருமணம் செய்யும் கோடைக்காலமாக இருக்காது என்று அவர் வலியுறுத்துகிறார்.

ஈஸ்டர் 2019 இல் நிச்சயதார்த்தம் செய்யப்பட்ட இவர்கள் இருவருக்கும் கொவிட் -19 காரணமாக ஏற்கனவே இரண்டு முறை திருமண முயற்சிகள் இரத்து செய்யப்பட்டன.

இந்நிலையில் "எனது சொந்த திருமண திட்டமிடலுக்கு மாறாக நாட்டை நடத்துவதற்கு எனது அனைத்து முயற்சிகளையும் நான் திட்டமிட்டுள்ளேன் என்று நான் உங்களுக்கு உறுதியளிக்கிறேன்," என்று கூறியவாறு அவர் சிரித்தார்.

பிரதமர் ஆடர்ன் மற்றும் அவரது வருங்கால கணவர் கிளார்க் கேஃபோர்டிற்கு Neve என்ற ஒரு மகள் உள்ளார்.

மேலும் இந்த ஆண்டு கிறிஸ்துமஸ் தனது நான்கு வயது குழந்தை தனது குடும்பத்திற்கு விருப்பமான சாக்லேட் ஸ்னோபால்ஸ் செய்முறையைக் கற்றுக் கொள்ளும் கிறிஸ்துமஸ் என்று பிரதமர் ஆர்டெர்ன் கூறினார்.