நியூசிலாந்தில் கொவிட்-19 தொற்றுகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

இதன்படி இன்று 6000 தொற்றுகள் பதிவாகியுள்ளன.

இது கடந்த செவ்வாய்கிழமை பதிவான தொற்று எண்ணிக்கையை விட 1247 அதிகமாகும்.

இன்று அறிவிக்கப்பட்ட வழக்குகளில், 26 சதவீதம் பேர் ஏற்கனவே தொற்றுக்குள்ளாகி குணமடைந்து மீண்டும் தொற்றுக்குள்ளானவர்கள் என கூறப்படுகிறது.

இதனிடையே தீவிர சிகிச்சை பிரிவில் 10 பேர் உட்பட வைரஸால் பாதிக்கப்பட்ட 328 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த மாத தொடக்கத்தில், சுகாதார அதிகாரிகள் ஊடக மாநாட்டை நடத்தினர் மற்றும் கோடை காலத்தில் கொவிட் தொற்றுகளின் எண்ணிக்கை உயரக்கூடும் என்று கூறினர்‌.

இதனிடையே பொது சுகாதார ஏஜென்சியின் துணை இயக்குநர் ஜெனரல் டாக்டர் ஆண்ட்ரூ ஓல்ட், தற்போதைய கொவிட் தொற்று எண்ணிக்கை ஜூலை மாதத்தில் காணப்பட்டதைப் போன்று உயரக்கூடும் என்று சுட்டிக்காட்டினார்.

ஒரு நாளைக்கு 10,000 முதல் 11,000 தொற்றுகள் வரை பதிவாகலாம் என தெரிவித்தார்.

இந்நிலையில் மக்கள் தங்கள் தடுப்பூசிகளை செலுத்தி கொள்வதை உறுதிசெய்யவும், தொற்று அறிகுறிகளாக இருந்தால் வீட்டிலேயே இருக்கவும், உடல்நிலை சரியில்லாமல் இருந்தால் பரிசோதிக்கவும், கோடை மாதங்களில் முடிந்தவரை கதவுகள் மற்றும் ஜன்னல்களைத் திறந்து வைக்கவும் மக்களை அவர் ஊக்குவித்தார்.

"முகக்கவசப் பயன்பாடு தொற்று பரவலைக் குறைக்கிறது என்பதற்கு நல்ல சான்றுகள் உள்ளன" என்று ஓல்ட் கூறினார்.