நியூசிலாந்து முழுவதும் உள்ள Dairy Shop உரிமையாளர்கள் தங்கள் கடைகளை அடைத்து ஜனக் படேலின் மரணத்திற்கு ஒற்றுமையாக எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

நாடு தழுவிய போராட்டம் இன்று மதியம் 12:30 மணிக்கு ஆரம்பமானது.

Dairy shop உரிமையாளர்கள் மற்றும் சில்லறை விற்பனையாளர்கள் ஆக்லாந்தில், பிரதமர் ஜசிந்தா ஆர்டெர்னின் தேர்தல் அலுவலகத்திற்கு வெளியே எதிர்ப்புத் தெரிவித்த நிலையில் வெலிங்டனில் உள்ளவர்கள் துணைப் பிரதமர் கிராண்ட் ராபர்ட்சனின் அலுவலகத்திற்கு வெளியே ஒன்று கூடி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்நிலையில் Sandringham இல் Dairy Shop உரிமையாளர்கள் மட்டும் தங்கள் கதவுகளை மட்டும் மூடவில்லை. 

அப்பகுதியில் உள்ள இறைச்சிக் கடை, travel agency மற்றும் உள்ளூர் கஃபே ஆகியவையும் தங்கள் ஆதரவைக் காட்ட மூடப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.