Māhia Peninsula வில் காணாமல் போன ஆண் மூழ்காளர் (‍ Diver) ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

சனிக்கிழமை காலை 10.15 மணியளவில் குறித்த நபர் காணாமல் போனதாக பொலிஸார் தெரிவித்தனர்.

நேற்று Hawke's Bay பகுதியில் கடலோர காவல்படை மற்றும் ஹெலிகாப்டர் அடங்கிய வான் மற்றும் நீர் வழி தேடுதல் பணி இன்றும் தொடர்ந்தது.

இன்று காலை 10.30 மணியளவில் சர்ஃப் லைஃப்சேவிங் NZ குழுவினரால் 
அவர் சடலமாக மீட்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இந்நிலையில் குறித்த நபரின் சடலம் மரணம் பிரேத பரிசோதனைக்கு அனுப்பப்படும் என கூறப்படுகிறது.