வெலிங்டனில் கனமழையால் மாநில நெடுஞ்சாலைகளில் வெள்ளப்பெருக்கு மற்றும் நிலச்சரிவுகள் ஏற்பட்டுள்ளன.

மேலும் மரங்கள் முறிந்து விழுவதால் வாகன சாரதிகள் கவனமாக இருக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

மண்சரிவுகள் தடுக்கப்பட்ட இரண்டு வெலிங்டன் நெடுஞ்சாலைகள் இப்போது மீண்டும் திறக்கப்பட்டுள்ளன.

இதனிடையே வெலிங்டனின் வடக்கு புறநகர்ப் பகுதிகள் மழையால் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், குறைந்தபட்சம் 80 மிமீ மழை பெய்துள்ளதாகவும் MetService வானிலை முன்னறிவிப்பாளர் Gerard Bellam தெரிவித்தார்.

ஆக்லாந்து முழுவதும் கனமழை பெய்துள்ளதாகவும், அங்கு இடியுடன் கூடிய மழை பெய்யும் என்றும் அவர் கூறினார்.

Hutt Valley வழியாக SH2 மற்றும் Basin Reserve அருகே மத்திய வெலிங்டனில் உள்ள SH1 ஆகியவற்றிலும் மழை வெள்ளப்பெருக்கை ஏற்படுத்தியுள்ளதாக தெற்கு பிராந்திய மேலாளர் மார்க் ஓவன் கூறினார்.