ஆக்லாந்தின் 89 ஆவது ஆண்டு வருடாந்திர Santa அணிவகுப்பு இன்று மழை காலநிலைக்கு மத்தியில் களைகட்டியது.

மழை முன்னறிவிப்பால் அணிவகுப்பை டிசம்பர் வரை தள்ளி வைக்கும் திட்டம் இருந்தபோதிலும், ஏற்பாட்டாளர்கள் மழையை பொருட்படுத்தாமல் நிகழ்வைத் தொடரப்போவதாக இன்று காலை உறுதிப்படுத்தினர்.

ஆக்லாந்தில் கொவிட்-19 கட்டுப்பாடுகள் காரணமாக கடந்த ஆண்டு அணிவகுப்பு ரத்து செய்யப்பட்டது. 

இந்த Santa அணிவகுப்பு இன்று பிற்பகல் 1 மணிக்கு ஆரம்பமானது.

இதற்கிடையில், இந்த அணிவகுப்பு Aotea சதுக்கத்தில் மாலை 5 மணி வரை நடைபெறும்

அங்கு சவாரிகள், பரிசுகள், உணவுக் கடைகள் மற்றும் Santa வை சந்திக்கும் வாய்ப்பு இருக்கும் என்று அமைப்பாளர்கள் கூறுகின்றனர்.

இந்த அணிவகுப்பை வழிநடத்தும் கிராண்ட் மார்ஷல் நியூசிலாந்தின் புகழ்பெற்ற ஒலிம்பியன் லிசா கேரிங்டன் ஆவார்.