இன்று பிற்பகல் ஹமில்டனில் ஒரு குழுவினரால் தாக்கப்பட்ட இளைஞர் ஒருவர் பலத்த காயம் அடைந்ததையடுத்து பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Ward தெருவில் மாலை 4.40 மணியளவில் இந்த சம்பவம் இடம்பெற்றது.

பாதிக்கப்பட்டவர் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார் என்று பொலிஸார் தெரிவித்தனர்.

தற்போது சம்பந்தப்பட்ட நபர்களை கண்டுபிடிக்கும் பணியில் பொலிஸார் ஈடுபட்டுள்ளனர்.

சம்பவம் நடந்த நேரத்தில் Ward தெருவில் இருந்தவர்கள் அல்லது சம்பவம் தொடர்பில் தகவல் தெரிந்தவர்கள் 105 என்ற எண்ணில் காவல்துறையை தொடர்பு கொண்டு P052734495‌ என்ற கோப்பு எண்ணை மேற்கோள் காட்டி தகவல்களை வழங்குமாறு பொலிஸார் கேட்டுக் கொண்டுள்ளனர்.