கடந்த புதன்கிழமை ஆக்லாந்து Dairy Shop கொள்ளை சம்பவத்தில் உயிரிழந்த நபரின் குடும்பத்தினரிடம் பிரதமர் ஜசிந்தா ஆர்டென் தொலைபேசி ஊடாக தொடர்பு கொண்டு பேசியுள்ளார்.

இன்று ஆக்லாந்தின் புறநகர் பகுதியான Sandringham இல் சமூகத் தலைவர்களைச் சந்தித்த பின்னர் பிரதமர் ஆடர்ன் 
ஆக்லாந்து மத்திய காவல் நிலையத்தில் காவல்துறை அமைச்சர் கிறிஸ் ஹிப்கின்ஸ் மற்றும் இன சமூக அமைச்சர் பிரியங்கா ராதாகிருஷ்ணன் ஆகியோருடன் ஊடக சந்திப்பில் பேசினார்.

இதன்போது அவர் கூறுகையில்...

"உயிரிழந்த Dairy Shop தொழிலாளியின் குடும்பத்தினருடன் பேசும் வாய்ப்பு கிடைத்தது," என்று அவர் கூறினார்.

அவரது குடும்பத்தை நேரில் சந்திக்க விரும்புவதாகவும், இதுவரை அவர்களுடன் தொலைபேசியில் மட்டுமே பேச முடிந்தது என்றும் பிரதமர் ஆர்டெர்ன் கூறினார்.

"நான் இந்த உரையாடலை சோகம் நிறைந்ததாக விவரிக்கிறேன், நான் அவர்களை நேரில் சந்திக்க விரும்புகிறேன்" என அவர் தெரிவித்தார்.