உக்ரைன் போரில் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் நோவிச்சோக் விஷத்தைப் பயன்படுத்தக்கூடும் என்று அமெரிக்க அதிகாரிகள் அஞ்சுகின்றனர்.

இது குறித்து டெய்லி மெயில் பத்திரிகையில் வெளியான தகவலில்...

உக்ரைனை சரணடைய வைக்க, ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் மேலும் சில ஆபத்தான நடவடிக்கைகளை எடுக்கலாம் என்ற அச்சம் அதிகரித்து வருகிறது. அணுகுண்டு தாக்குதல் அல்லது டர்டி  வெடிகுண்டு தாக்குதல் ஆகியவை இதில் அடங்கும்.

ஆனால் புடின் நேட்டோவுடன் அணுசக்தி மோதல் நடவடிக்கையை தேர்ந்தெடுக்கும் முன்பு இரசாயன ஆயுதங்களைப் பயன்படுத்தத் தயாராக இருக்கிறார் என்று தகவல் அறிந்த ஆறு பேர் தெரிவிக்கின்றனர்.

ரஷ்யாவின் அத்தகைய தாக்குதலை கையாளும் வகையில், அதன் மேற்கத்திய கூட்டாளிகள் தயாராக இருப்பதை உறுதிப்படுத்த அதிபர் ஜோ பைடனின் நிர்வாகம் செயல்படுவதாக ஆதாரங்களை மேற்கோள் காட்டி பொலிட்டிகோ தெரிவித்துள்ளது.

போர்க்களத்தில் ரஷ்யாவிற்கு மேலும் இழப்புகள்  ஏற்பட்டால் அல்லது புட்டினின் படைகள் மொத்தமாக சரிந்தால் ரஷ்யா இரசாயன ஆயுதங்களைப் பயன்படுத்தும் என்று வாஷிங்டன் கணித்துள்ளதாக அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

அத்தகைய தாக்குதலுக்கு மூலோபாயம் செய்யும் உயர்மட்ட அமெரிக்க அதிகாரிகள் ரஷ்யா கடந்த காலத்தில் பயன்படுத்திய இரசாயன ஆயுதங்களை மாஸ்கோ பயன்படுத்தக்கூடும் என்று நம்புகிறார்கள் என கூறப்பட்டுள்ளது.

இது தவிர எதிர்க்கட்சித் தலைவர் அலெக்ஸி நவல்னி மற்றும் முன்னாள் ரஷ்ய ராணுவ உளவுத்துறை அதிகாரி செர்ஜி ஸ்கிரிபால் ஆகியோருக்கு விஷம் வைக்கப்பட்டது.

இருவரும் Novichok என்னும் நரம்பு மண்டலத்தை பாதிக்கும் விஷம் கொடுக்கப்பட்டு, ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். எனினும், இருவரும் அதில் இருந்து தப்பினர்.

கடந்த காலங்களில், ரஷ்யா அரசுக்கு எதிரானவர்களை  முடக்க நோவிசோக் விஷத்தை பயன்படுத்தியது.

பெரிய அளவிலான வன்முறை சம்பவங்களை நடத்தவும் இதைப் பயன்படுத்தலாம் என்று அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.