ட்விட்டரை வாங்கியதில் இருந்தே பல்வேறு அதிரடிகளை எலான் மஸ்க் எடுத்து வருகிறார்.

அந்த வகையில், அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்பின் முடக்கப்பட்ட ட்விட்டர் கணக்கை மீண்டும் அனுமதிக்கலாமா? என்று ட்விட்டரில் எலான் மஸ்க் வாக்கெடுப்பு நடத்தினார். எலான் மஸ்க்கின் இந்த வாக்கெடுப்பிற்கு பெரும்பாலானோர் டிரம்ப் கணக்கை அனுமதிக்க வேண்டும் என்று ஆதரவாக வாக்களித்தனர்.

இதையடுத்து, டிரம் கணக்கை மீண்டும் ட்விட்டரில் எலான் மஸ்க் அனுமதித்தார்.

இதனிடையே நெட்டிசன் ஒருவர் அமெரிக்காவை சேர்ந்த அலெக்ஸ் ஜோன்ஸ் என்பவரை மீண்டும் ட்விட்டரில் அனுமதிப்பீர்களா? என்று கேள்வி எழுப்பி இருந்தார்.

இதற்கு பதிலளித்த எலான் மஸ்க்...

குழந்தையின் மரணத்தை தங்கள் புகழுக்காகவும் அரசியல் லாபத்திற்காகவும் பயன்படுத்துவர்கள் மீது நான் ஒருபோதும் இரக்கம் காட்ட மாட்டேன் என்று கூறியிருக்கிறார்.

மேலும், தன்னுடைய முதல் குழந்தை 10 வாரங்களில் என்னுடைய கைகளிலேயே இறந்து போய் விட்டதாகவும் அவனது இதய துடிப்பை தன்னால் உணர முடிந்ததாகவும் உருக்கமாக எலான் மஸ்க் உருக்கமாக தெரிவித்துள்ளார்.

எலான் மஸ்க் கடந்த 2000 ஆம் ஆண்டில் வில்சன் என்பவரை திருமணம் செய்தார். இந்த தம்பதிக்கு 2002 ஆம் ஆண்டு முதல் குழந்தை பிறந்தது.

எனினும், நிவாண்டா அலெக்ஸாண்டர் என்ற அந்த குழந்தை திடீரென உயிரிழந்தது.

இந்த சம்பத்தை குறிப்பிட்டே எலான் மஸ்க் தற்போது குழந்தையின் மரணத்தை வைத்து லாபம் தேடுபவர்களுக்கு இரக்கம் காட்ட மாட்டேன் என்று ட்விட்டரில் பதிவிட்டு இருக்கிறார்.

எலான் மஸ்க் இது குறித்து ஏற்கனவே ஒருமுறை பொதுவெளியில் பகிர்ந்து இருக்கிறார். கடந்த 2018 ஆம் ஆண்டு டெஸ்லா நிறுவனத்தின் ஊழியர் ஒருவரின் மகன் இறந்த போது ஆறுதல் தெரிவித்து இமெயில் அனுப்பிய எலான் மஸ்க், குழந்தை இறப்பதை விட மோசமான எதுவும் இல்லை. பிறந்து 10 வாரமே ஆன எனது மகனை இழந்தேன்' என்று குறிப்பிட்டு இருந்தார்.