நியூசிலாந்தில் உள்ள Chatham Islands இல் 20 சதவீத வீடுகளுக்கு தண்ணீர் தொட்டிகள் மற்றும் வடிகட்டுதல் அமைப்புகளுக்கு அரசாங்கம் 500,000 டொலர்கள் நிதி ஒதுக்கீட்டை அறிவித்துள்ளது.

பிரதமர் ஜசிந்தா ஆர்டெர்ன் மற்றும் அவசரகால மேலாண்மை அமைச்சர் கீரன் மெக்அனுல்டி ஆகியோர் இன்று தொலைதூர தீவுகளுக்கு விஜயம் செய்த போது இந்த திட்டத்தை அறிவித்தனர்.

ஒவ்வொரு வீட்டிற்கும் 30,000 லிட்டர் தண்ணீர் தொட்டி மற்றும் ஒரு வடிகட்டுதல் அமைப்புக்கு இந்த நிதியுதவி வழங்கப்படும் என்று McAnulty கூறினார்.

Chatham Islands இல் உள்ள பல குடும்பங்கள் குடிநீருக்கு எளிதான அணுகல் இல்லாததால், கட்டுப்படியாகாத, நீடிக்க முடியாத மற்றும் சில நேரங்களில் பாதுகாப்பற்ற வழிகளில் தங்கள் வீடுகளுக்கு தண்ணீரைப் பெற வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர் என்று அவர் கூறினார்.

இது ஒப்பீட்டளவில் சிறிய அளவிலான திட்டமாக இருந்தாலும், சமூகத்தின் கணிசமான பகுதியினர் சுத்தமான மற்றும் நம்பகமான நீர் விநியோகத்தை பெறுவதை உறுதிசெய்வது எதிர்வரும் ஆண்டுகளில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும்.

இந்த திட்டம் சுற்றுச்சூழலுக்கும் குடியிருப்பாளர்களின் ஆரோக்கியத்திற்கும் ஆதரவளிக்கும் அதே வேளையில் பணத்தை மிச்சப்படுத்தும் என்றார்.

இந்த திட்டத்தின் கட்டுமானப் பணிகள் உள்நாட்டில் நடத்தப்படும்.

மேலும் Chatham Islands கவுன்சில், Chatham Islands குடிமைத் தற்காப்பு அவசர மேலாண்மை குழு, Ngāti Mutunga o Wharekauri Iwi Trust, Hokotehi Moriori Trust மற்றும் தேசிய அவசரகால மேலாண்மை நிறுவனம் ஆகியவற்றின் ஒத்துழைப்புடன் இந்த திட்டம் அமல் படுத்தப்படும் என கூறப்பட்டுள்ளது.