Wairarapa வில் மேற்கொள்ளப்பட்ட நான்கு தேடுதல் வாரண்டுகளுக்குப் பின்னர் பொலிசார் மூன்று பேரைக் கைது செய்து பணம், போதைப்பொருள் மற்றும் துப்பாக்கிகளை கைப்பற்றியுள்ளனர்.

மேலும், இரண்டு சோதனைச் சாவடிகளில் ஐந்து வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டதாகவும், பல விதிமீறல் அறிவிப்புகள் வழங்கப்பட்டதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

இந்நிலையில் கைது செய்யப்பட்டவர்களில் ‌30 வயதுடைய நபர் ஒருவர் மீது சட்டவிரோதமாக துப்பாக்கி, சட்டவிரோதமாக வெடிமருந்துகளை வைத்திருந்தமை மற்றும் மெத்தம்பேட்டமைன் வைத்திருந்தமை ஆகிய குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன.

மேலும் பிணையை மீறிய குற்றச்சாட்டில் 30 வயதுடைய பெண்ணொருவர் மீதும், கஞ்சா விநியோகித்தமைக்காக 20 வயதுடைய இளைஞன் மீதும் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

இவர்களில் இருவர் Masterton மாவட்ட நீதிமன்றத்தில் இன்று ஆஜர்படுத்தப்பட்டனர், ஒருவர் அடுத்த வாரம் ஆஜராவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் 6 பேருக்கு போதைப்பொருள் கடத்தல் தொடர்பாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

துப்பறியும் சார்ஜென்ட் கோரே ரீட் கூறுகையில்...

இந்த நடவடிக்கையானது Operation Cobalt நடவடிக்கையின் ஒரு பகுதியாகும், இது கும்பல் உறுப்பினர்களின் சட்டவிரோத நடவடிக்கைகளை இலக்காகக் கொண்டது.

"எங்கள் சமூகங்களை போதைப்பொருள், வன்முறை மற்றும் துப்பாக்கிகளால் தொடர்ந்து பலிவாங்க விரும்பும் கும்பல் உறுப்பினர்களுக்கு நாங்கள் வழங்கும் செய்தி என்னவென்றால், நாங்கள் உங்களை தொடந்து குறிவைப்போம்." என அவர் தெரிவித்தார்.