பிரதமர் ஜசிந்தா ஆர்டெர்ன் Dairy Shop -கள் மூடுபனி பீரங்கிகளைப் (fog cannons) பெறுவதற்கான விதிமுறைகள் யாவை என தெளிவுபடுத்துமாறு பொலிஸாரிடம் கேட்டுக் கொண்டுள்ளார்.

ஜனக் படேல் கொல்லப்பட்ட ஆக்லாந்து Dairy Shop இரண்டு முறை மூடுபனி பீரங்கிகளை பெறுவதற்கு விண்ணப்பித்த நிலையில் அந்த விண்ணப்பங்கள் இரண்டு முறையும் மறுக்கப்பட்டது.

ஆக்லாந்து முழுவதும் உள்ள பல Dairy Shop -களில் கொள்ளை சம்பவங்கள் இடம்பெற்றால் மட்டுமே தாங்கள் மூடுபனி பீரங்கிகளை பெறுவதற்கு  தகுதியுடையவர்கள் என்று காவல்துறை கூறியதாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில் அது தவறு என்று பிரதமர் ஆர்டர்ன் கூறினார்.

 "மூடுபனி பீரங்கிகளை பெறுவதற்கான விதிமுறைகள் அதுவல்ல"

"எனவே, அந்தச் செய்தி ஏன் கொடுக்கப்பட்டது என்பதை நான் காவல்துறையினருடன் சரிபார்க்க விரும்புகிறேன்" என பிரதமர் ஆடர்ன் அதிரடியாக தெரிவித்துள்ளார்.