அமெரிக்காவில் 30 ஆண்டுகளாக உறைய வைக்கப்பட்ட கருமுட்டைகள் மூலம் தம்பதியர் இரட்டை குழந்தைகளை வரவேற்றுள்ளனர்.

அமெரிக்காவின் Oregan-ஐ சேர்ந்த பிலிப் ரிட்ஜ்வே மற்றும் ரேச்சல் தம்பதி, IVF மூலம் இரட்டை குழந்தைகளுக்கு பெற்றோராகியுள்ளனர்.

1992ஆம் ஆண்டு உறைய வைக்கப்பட்ட கருமுட்டைகளைக் கொண்டு பிலிப்-ரேச்சல் தம்பதிக்கு இரட்டை குழந்தைகள் பிறந்துள்ளன. இது மருத்துவ உலகில் உலகில் மிகப்பெரிய சாதனை என்று நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

குறித்த தம்பதி தங்கள் குழந்தைகளுக்கு லிடியா, டிமோத்தி என பெயர் சூட்டியுள்ளனர், லிடியா 2.5 கிலோ எடையுடனும், டிமோத்தி 2.9 கிலோ எடையுடனும் பிறந்துள்ளனர்.

ஏற்கனவே, பிலிப்- ரேச்சல் தம்பதிக்கு நான்கு குழந்தைகள் உள்ள நிலையில், லிடியா மற்றும் டிமோத்தி தான் தங்கள் மூத்த குழந்தைகள் என அவர்கள் தெரிவித்துள்ளனர்.

இதற்கு முன்பாக 2020ஆம் ஆண்டு 27 ஆண்டுகள் உறைய வைக்கப்பட்ட கருவில் இருந்து பிறந்த குழந்தையே சாதனையாக இருந்தது குறிப்பிடத்தக்கது.