ஆரோக்கியம் மற்றும் நல்வாழ்வை மேம்படுத்துவதற்கான Arasan NZ Trust இன் பார்வையின் ஒரு பகுதியாக Waikato வின் Morrinsville இல் கடந்த ஞாயிற்றுக்கிழமை (20) மாபெரும் கிரிக்கெட் போட்டி நிகழ்வு இடம்பெற்றது.

இந்த போட்டியில் Arasan Superkings North அணி, Morrinsville Lions அணி ஆகிய இரண்டு அணிகள் களமிறங்கி துடுப்பெடுத்தாடினர்.

இந்நிலையில் அணியின் தலைவர் ஸ்ரீநிவாசன் மணி அவர்களின் தலைமையில் சிறப்பாக துடுப்பெடுத்தாடிய Arasan Superkings North அணி வெற்றியை தனதாக்கி வெற்றி வாகை சூடியது.

இந் நிகழ்வின் சிறப்பு விருந்தினராக பங்கேற்க Morrinsville Dallas Clinic Director வைத்தியர் Saif Sulaiman அவர்கள் வெற்றிக் கோப்பைகளை வழங்கி வைத்தார்.

மேலும் Arasan NZ Trust இன் தலைவர் டாக்டர் லட்சுமணன் செல்வநேசன் மற்றும் செயலாளர் கிஷோர்குமார் குமாரசுவாமி, Trustees and Women Wings யசோதா கிஷோர்குமார் மற்றும் டாக்டர் கார்த்திகா செல்வநேசன் அவர்களும் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர்.

Arasan NZ Trust இன் ஆலோசகர்களான திரு தயானந்தன் லெனின், திரு செந்தில் சபாபதி மற்றும் Arasan NZ Trust இன் Waikato ஒருங்கிணைப்பாளர் திரு தினேஷ் ரவி அவர்களும் இந்த நிகழ்வில் பங்கேற்றனர். மற்றும் வைகாடோ தமிழ்ச் சங்கத்தின் தலைவர் திரு ஸ்ரீனிவாசன் அவர்களும் கலந்து கொண்டார்.

இதனிடையே இந்த போட்டி நிகழ்விற்கு நிதி உதவி வழங்கிய Waikato Trust இற்கு எமது மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறோம்.