15 வயதில் தேசிய அடையாள அட்டையை கட்டாயம் பெற்றுக்கொள்ள வேண்டும் என ஆட்பதிவு திணைக்களம் சுற்றறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

இந்த சுற்றறிக்கையின் பிரகாரம், உரிய வயதில் அடையாள அட்டை பெறாத நபர்கள், அந்த வயதிற்கு மேற்பட்ட அடையாள அட்டைகளுக்கு விண்ணப்பிக்கும் சந்தர்ப்பங்களில், 2500 ரூபா அபராதம் விதிக்கப்படும்.

இந்நாட்டில் தற்போது நடைமுறையில் உள்ள சட்டத்தின் படி 15 வயதை எட்டியவுடன் தேசிய அடையாள அட்டையை பெற்றுக்கொள்ள வேண்டும் என்ற சட்டம் உள்ளது.

கல்விப் பொதுத்தராதர பரீட்சைக்குத் தோற்றும் மாணவர்களுக்கு அடையாள அட்டை வழங்குவதற்கான நடவடிக்கைகள் குறித்து ஒவ்வொரு வருடமும் அனைத்துப் பாடசாலைகளுக்கும் சுற்றறிக்கை வெளியிடப்படுகின்ற போதிலும் ஐம்பது வீதமான பாடசாலை மாணவர்களின் விண்ணப்பங்கள் அனுப்பப்படுவதில்லை என தெரிவிக்கப்படுகிறது

இது தொடர்பில் குறித்த பாடசாலை அதிபர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு அறிவிக்கும் வகையில் இந்த சுற்றறிக்கை வெளியிடப்பட்டுள்ளதாக ஆட்பதிவு திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளது.