உலக கோப்பை கால்பந்து போட்டிகள் கத்தார் நாட்டில் தொடங்கி நடந்து வருகின்றன.

இந்த போட்டி நிகழ்ச்சிகளை நேரலையில் ஒளிபரப்பி கொண்டிருக்கும்போது, அர்ஜெண்டினா நாட்டு பெண் நிருபர் டாமினிக் மெட்ஜ்கர் பரபரப்புடன் செயல்பட்டு இருந்துள்ளார்.

இதில், அவரிடம் இருந்த கைப்பை ஒன்று திருடு போயுள்ளது.

அதனை முதலில் அவர் கவனிக்கவில்லை. பின்னர் இதுபற்றி உதவி கேட்டு பொலிஸாரிடம் டாமினிக் சென்றுள்ளார்.

ஆனால் அதற்கு கிடைத்த பதில் அவரை ஆச்சரியமடைய செய்துள்ளது.

இவர் சென்றபோது, பெண் காவல் அதிகாரி ஒருவர், உயர்ந்த தொழில் நுட்பம் கொண்ட கேமிராக்களை எல்லா இடத்திலும் நாங்கள் வைத்திருக்கிறோம். அதனால் முக அடையாளம் வழியே அந்நபரை (திருட்டில் ஈடுபட்ட நபர்) நாங்கள் கண்டறிய போகிறோம். அவரை கண்டறிந்த பின்பு அந்த நபருக்கு என்ன நீதி வழங்க நீங்கள் விரும்புகிறீர்கள்? என கேட்டு அவரை ஆச்சரியமடைய செய்துள்ளார்.

இதனால் சற்று விளக்கும்படி டாமினிக், அந்த பெண் அதிகாரியிடம் கேட்டுள்ளார்.

அதற்கு அவர், உங்களுக்கு என்ன நீதி வேண்டும்? அந்த நபருக்கு நாங்கள் என்ன தண்டனை கொடுக்க வேண்டும் என்று நீங்கள் விரும்புகிறீர்கள்?

அந்த நபரை 5 ஆண்டுகள் சிறையில் தள்ள நீங்கள் விரும்புகிறீர்களா?

அவரை நாடு கடத்த விரும்புகிறீர்களா? என கேட்டுள்ளார்.

இதனால் ஆச்சரியத்தில் தள்ளப்பட்ட டாமினிக், காணாமல் போன தன்னுடைய பர்ஸ் உள்ளிட்ட பொருட்களை கண்டுபிடிக்க உதவினால் போதும் என்று கூறியுள்ளார்.

இந்நிலையில் காவல் நிலையத்தில் தனக்கு கிடைத்த இந்த அனுபவத்தை தொலைக்காட்சியில் மெட்ஜெர் பகிர்ந்து இருக்கிறார்.

உலக கோப்பை போட்டியை நடத்தி வரும் கத்தாரில் பாதுகாப்பு விவகாரம் அதிகம் பேசப்படும் ஒன்றாக உள்ளது.

உலக கோப்பை போட்டிகளுக்கான கத்தார் போட்டி பாதுகாப்பு குழு நூற்றுக்கணக்கான பணியாளர்களை வேலையில் அமர்த்தியுள்ளது.

இதில் பெரும்பாலானோர் போதிய அனுபவம் இல்லாதவர்கள் என்றும் விமர்சனத்திற்கு உள்ளாக்கப்பட்டு வருகிறது.